“விக்ரம்” திரைப்படம் 700 கோடிகளை வசூல் செய்து மாபெரும் வெற்றியை பதிவு செய்து கமல்ஹாசன் மார்கெட்டை வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. தற்பொழுது அவர் பெரும் சம்பளம் 100 கோடிகளை தாண்டுகிறது.
அதே போல் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன் பாதையையும் இந்த படம் மாற்றியுள்ளது. தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பதிவு செய்து இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவரின் சம்பளம் தற்போது 25 கோடிகள் என சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் மெகா வெற்றியால் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் இணைவது உறுதி ஆகி உள்ளது. அது தான் தளபதி 67. இந்த படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் துவங்க உள்ள நிலையில், அதற்கான காஸ்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் விஜய்க்கு நான்கு வில்லன்கள் என தகவல் கசிந்துள்ளது. அவர்கள் மிஷ்கின், சஞ்ஜய் தத், அர்ஜுன், கெளதம் மேனன் ஆகியோர் இவர்களுக்கு பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.