வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நேரடியாக தெலுங்கில் நடித்து வரும் படம் தான் “வாத்தி. இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “வா வாத்தி” பாடல் தனுஷ் வரிகளில், ஸ்வேதா மோகன் குரலில் யூடியூபில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் முன்னரே இப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரீலீஸ் தேதியை படக்குழு 2023 பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
படத்தில் இன்னும் சில பணிகள் உள்ளதால் இந்த தாமதம் என கூறப்படுகிறது.