Mnadu News

தவறு செய்திருந்தால் கைது செய்யுங்கள்: ஜார்கண்ட் முதலமைச்சர் பேச்சு.

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ஜார்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த சோரன் இன்று நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர்; இன்று ஆஜராகவில்லை, மாறாக சத்தீஸ்கரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார்.
விழாவில் இதுகுறித்துப் பேசியுள்ள ஹேமந்த் சோரன், ‘அமலாக்கத்துறை இன்று எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், ஏற்கெனவே இந்த விழாவுக்கு வர நான் திட்டமிட்டிருந்தேன். நான் உண்மையில் குற்றம் செய்திருந்தால் வந்து என்னைக் கைது செய்யுங்கள். ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள்? அமலாக்கத் துறை அலுவலகம் முன்பாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மக்களுக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு கிழக்கு மாநிலங்கள் ஜார்கண்ட் மக்களால் மட்டுமே ஆட்சி செய்யப்படும், வெளி மாநிலத்தவர்கள் இங்கு ஆட்சி செய்ய முடியாது, வரும் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends