சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், “நாட்டில் பல்வேறு குற்றங்களுக்கு முக்கிய காரணம் மது. சமீப காலங்களில் பெண்களும் மது அருந்துவது கவலை அளிக்கிறது.இந்த சூழலில்,சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்கப்படவுள்ளது.இது மாணவர்கள் எளிதில் மதுவைப் பெற வகை செய்யும். எனவே, தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட அமர்வு, தானியங்கி மது விற்பனை இயந்திரங்களில் மது வாங்க வருபவர்களைக் கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

திடீரென ஆற்றில் கவிழ்ந்த அமைச்சர் பயணித்த படகு: பதறிப்போன அதிகாரிகள்.
தெலங்கானா மாநிலம் அமைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மாநிலத்தின் பத்தாம்...
Read More