Mnadu News

தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கு புதிய கல்விக்கொள்கை வழிவகுத்துள்ளது: அமித் ஷா விளக்கம்.

கவுகாத்தியில், இரண்டு நாள் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி குழு கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அனைத்து மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் நாடு வளர்ச்சி அடையும் என்றும், தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளதாக கூறினார். மாநிலங்களில் உள்ள தீவிரவாத பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.
அண்மையில் தொடங்கப்பட்டுள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்தை மாநிலங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அமித் ஷா, மழைவெள்ளத்தை எதிர்கொள்வது, வனப்பகுதி விரிவாக்கம், சுற்றுலாவை ஊக்குவிப்பது போன்றவற்றிக்கு இந்த மையம் பெரிதும் உதவிடும் என்றும் கூறினார். பின்னர் அசாம் மாநில காவல்துறை கண்காணிப்பாளர் மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

Share this post with your friends