ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று பெயர்பெற்ற மும்பையில் 259 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் தாராவி குடிசைப் பகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்த நிலையில், உச்சபட்ச தொகையுடன் அதானி குழுமும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை மேம்படுத்த 5 ஆயிரத்து 69 கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருந்த அதானி குழுமம், இதே ஒப்பந்தத்தில் ஈடுபட்ட டிஎல்எஃப் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, வெற்றி பெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். பிறகு அது பரிசீலனை செய்து இறுதி அனுமதி வழங்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் இரண்டொரு வாரத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இந்த ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி வழங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை நிறைவு செய்ய 7 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு தற்போது 6 லட்சத்து 50 ஆயிரம்; குடிசைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த ஒப்பந்தப்புள்ளியில் 3 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒப்பந்தப்புள்ளியில் வெற்றி பெற்ற நிறுவனம்தான், தாராவி பகுதியில் உள்ள மக்களின் மறுவாழ்வுக்கும், கட்மைப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More