கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். ஏற்கனவே கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக அணை 44 அடி நிரம்பியுள்ளதால் மதகுகள் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கல்வராயன் மலையில் கீழ் கோமுகி அணைக்கு வரும் நீர் பிடிப்பு பகுதிகளில் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால் நீர்வரத்து கோமுகி அணைக்கு அதிகரித்தது உள்ளது. அப்போது கோமுகி அணைக்கு நீர்வரத்து வரும் பகுதிகளில் திடீரென நீர் இடி விழுந்ததால் அதிக அளவு நீர் கொப்பளித்து அணைக்கு 3000 கன அடி வீதம் நீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணையின் ஒரு பக்க ஷட்டர் திறக்கப்பட்டு தற்போது 2700 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இப்படி நீர் வெளியேற்றப்படுவதால் கோமதி ஆற்றம் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.