Mnadu News

தினகரன் நாளிதழ் அலுவலக வழக்கு 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரையில் 2007ல் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனையும், மேலும் 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரைக் கிளை  உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

கலைஞரின் அடுத்த வாரிசு யார் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பை தினகரன் நாளிதழ் நடத்தியது. அதற்கு விரும்பத்தகுந்த முடிவுகள் கிடைக்காததால் முக அழகிரி ஆதரவாளர்கள்  தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தீயிட்டு எரித்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த 3 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரணைச் செய்த விசாரணை நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவர்களை நிரபராதி என விடுவித்திருந்தது. இந்நிலையில் அந்தத் தீர்ப்பையும் ரத்து செய்து மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

Share this post with your friends