மும்பையில் நேற்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் குறித்த பட்டியல் அறிவிக்கப்பட்டது .அதில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அவர்களும்இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவாஸ்கர் கூறுகையில் உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருப்பது நல்லது என்றும் போட்டியின் போது டோனி அவர்களுக்கு உடல்நிலை ஏதும் ஒத்துழைக்கவில்லை என்றால் இவர் தோனிக்கு பதில் சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார் என்றும் கூறினார் .
மேலும் அவர் ரிஷபான்ட் இந்த பட்டியலில் இடம்பெறாமல் இருந்தது அச்சிரியம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஏன் இந்த உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் .