Mnadu News

திமுகவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்

தென் தமிழகத்தில் தமிழக விரோத பாஜக கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் சீட் கொடுக்கப்பட்டதால் விரக்தியான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவுக்கு அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை நேற்று மாலை சந்தித்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜகண்ணப்பன் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளாக திமுகவும் அதிமுகவும் தான் இருந்து வருகிறது. ஆனால் பாஜக அரசிற்கு அடிபணிந்ததால் அதிமுகவில் தொடர்ந்து நீடிக்க முடியாது. எனவே பிரதான திராவிடக் கட்சியான திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக  கூறினார்.

இதற்கு முன்னர் தனிக்கட்சித் தொடங்கிய ராஜகண்ணப்பன் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பின்னர் அதிமுகவில் தனது கட்சியை இணைத்து இந்நாள் வரை அதிமுகவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends