தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் திமுகவின் தேர்தல் அறிக்கைக் குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், திமுக தேர்தல் அறிக்கையில் கதாநாயகன் கதாநாயகி என எதுவும் இல்லை. வெறும் காமெடியன்கள் மட்டுமே இருக்கிறார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.