பொதுவாகவே நடிகர் நடிகைகள் அதிகளவில் கிசுகிசுக்குகளில் மாட்டிக் கொள்வது அவர்களது காதல் வாழ்க்கையில் தான். சமீபத்தில் விஷால் மற்றும் அனிஷா கிசுகிசு வெளியான போது இருவரும் திருமணம் செய்து கொள்வதாக விஷாலே உறுதிப்படுத்தினார்.
அந்த வகையில் நடிகை திரிஷா அடிக்கடி கிசு கிசுக்களில் சிக்கி வந்தார் . திருமண வயதை கடந்த நடிகை த்ரிஷாவும் ராணாவும் காதலித்து வருவதாகவும், அதோடு மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இவர்களுக்கு நேர்ந்த கருத்து வேறுபாடுகளால் இந்த திருமணமும் நின்றதாக தகவல்கள் வெளியாகி வந்தன .
தற்போது சினிமா வட்டாரங்களிடையே பரப்பாக பேசி வருவது ஆர்யா மற்றும் சாயீஷா திருமணம் உறுதியானது தான். இது குறித்து தகவலை இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியை அறிந்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர் அந்த வகையில் ராணா ஆர்யாவின் திருமணத்திற்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு திரிஷா ராணாவிடம் ரிப்ளை செய்திருப்பது மீண்டும் இவர்கள் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 96 பாணியில் தான் த்ரிஷ்சாவுக்கு கல்யாணம் நடக்கும் போல ஆனால் ராம்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.