Mnadu News

ஜியோமி நிறுவனத்தில் லே ஆஃப்! அதிர்ச்சியில் ஊழியர்கள்! 

எதிர்பாராத லே ஆஃப் :  

கொரோனா பெரும்தொற்று துவங்கியது இருந்தே நாடு பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பலரின் பணிகளும் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்கிற சூழல் உருவாகி உள்ளதால், உலக அளவில் பல லட்சம் நபர்கள் இது குறித்த கலக்கத்தில் உள்ளனர். அமேசான், டிவிட்டர், கூகுள், மைக்ரோசாப்ட், டிஸ்னி என இப்படி நிறுவனங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் தற்போது இணைந்துள்ளது ஒரு மெகா நிறுவனம். ஆம், இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் வர்த்தக சந்தையை கொண்டுள்ள ஜியோமி நிறுவனம் தற்போது லே ஆஃப் அறிவிப்பை வெளியிட்டு அதன் ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.

லே ஆஃப்பில் இணைந்த ஜியோமி: 

2023 ஆம் ஆண்டின் முதல் பருவத்தில் ஜியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்துள்ளது ஜியோமி. மேலும், இனி வரும் காலங்களில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது 10 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், அதில் இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் இருப்பதாக தெரிகிறது.

வர்த்தகம் பாதிப்பு : 

வர்த்தகத்தை மேம்படுத்தவும், நிறுவனம் லாபகர சூழலுக்கு மாற்றுவதற்கும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சியோமியின் மொத்த மொபைல் விற்பனை 50 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் ஜியோமி வர்த்தகம் கணிசமாக குறைந்து உள்ளது. அதன்படி, ஜியோமி பங்கு 15 சதவீதமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this post with your friends