உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் வாகன நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பக்தர்களின் வாகனைங்கள் வந்து செல்வதற்கான ஒருவழிப்பாதை மற்றும் கோவில் வளாகங்கள், நாழிக்கிணறு பேருந்துநிலையம், கடற்கரை பகுதிகள், திருநெல்வேலி சாலை, மற்றும் ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்கள், மற்றும் சூரசம்காரம் நடைபெறக்கூடிய கடற்கரை பகுதி ஆகிய இடங்களை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.