திருப்பதி அருகே உள்ள ராஜம்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்தகோனாவில் செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக சிறப்புப்படை போலீஸ் சூப்பிரண்டு மேதா சுந்தரராவுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் மேற்பார்வையில் வல்லமடுகு வனப்பகுதியில் உள்ள பெடகோனாவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 41 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More