Mnadu News

திருமண சடங்கு இல்லாமல் பதிவு: போலி திருமணமாக கருதப்படும்.

தம்பதி என பதிவு செய்வோர், முறைப்படி திருமணச் சடங்குகளை செய்துகொள்வது கட்டாயம். தனிநபர் சட்டப்படி, ஒரு தம்பதி அவர்களது முறைப்படி திருமணத்தை நடத்தி முடித்த பிறகே, அவர்களது திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ன்படி பதிவு செய்ய வேண்டும். ஆனால், திருமண சடங்குகள் எதையும் மேற்கொள்ளாமல், இந்த சட்டத்தின் கீழ் ஒரு திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஆர். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அதோடு, ஒரு திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு, அவர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது, பதிவுத் துறை அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அவ்வாறு திருமணச் சடங்குகள் நடைபெற்றிருக்கிறதா என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இரு தரப்பினரும் அளிக்கும் திருமணப் பதிவு விண்ணப்பங்களை வெறுமனே இயந்திரக்கதியில் பதிவு செய்யக் கூடாது. ஒரு வேளை, எந்த திருமணச் சடங்கும் நடைபெறாமல், ஒரு தம்பதிக்கு திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், அந்த சான்றிதழ் போலி திருமணப் பதிவுச் சான்றிதழாகவேக் கருதப்படும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

Share this post with your friends