Mnadu News

திருமலையில் மொட்டை போடும் தொழிலாளிகள் திடீர் போராட்டம்: பக்தர்கள் அவதி.

திருமலை ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்கள், மொட்டை போடும் தொழிலாளிகளுக்கு பணம் கொடுக்க கூடாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனாலும், பக்தர்கள் தாமாக முன்வந்து மொட்டை போடும் தொழிலாளிகளுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதனை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேவஸ்தான ஊழியர்கள், பணியில் இருந்த மொட்டை போடும் தொழிலாளிகளின் ஆடைகளைக் கலைத்து சோதனை செய்துள்ளனர். அவர்களிடமிருந்த பணம் மற்றும் அடையாள அட்டையையும் அவர்கள் பறித்துச் சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அனைத்து மொட்டை போடும் தொழிலாளிகளும் வளாகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில்; ஈடுபட்டனர்.தகவலிறிந்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மீண்டும் பணியை தொடங்கினர். மொட்டை போடும் தொழிலாளிகளின் போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக தலைமுடி காணிக்கை அளிக்க முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More