சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில,; கோடைக் காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் மே 3-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை, புதன்கிழமை தோறும் இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12.45 மணிக்கு எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு ரயில் , வரும் மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை, வியாழக்கிழமை தோறும் மதியம் 2.25 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.இந்த ரயில்கள், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More