தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பதை விட, திரையரங்குகளுக்குச் சென்று படங்களை பார்ப்பது தான் ரசிகர்களுக்கு பெரும் ஆவலை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படமும், கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ திரைப்படமும் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க கோரி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு வரும் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையரங்குகளில் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு உயர்வு.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் விரைவு ரயில் உள்பட மூன்று ரயில்கள்...
Read More