Mnadu News

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?

காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள் வெளியாவது வழக்கம். சரியான திரைக்கதை, மக்களை அமர வைக்கும் அமசங்கள் இருந்தால் மட்டுமே வெளியாகும் படங்களில் சில பிழைத்து கொள்ளும். அப்படி இந்த வாரமும் பல படங்கள் வெளியாகி உள்ளன. ஆம், “ஜெயிலர்” சற்று ஒயிந்துள்ள நிலையில் இவை அனைத்தும் திரை அரங்குகளை ஆட்கொண்டு உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பதை இதோ பார்க்கலாம்.

குஷி :
சிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரக்கொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “குஷி”. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் தற்போது நிகழ்ந்த ப்ரமோஷன் வரை படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், லட்சுமி, ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் குஷி நாளை வெளியாகிறது.

பரம்பொருள்:
இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார், அமிதாஷ் பிரதான், காஷ்மீரா இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார். இதில் அனிருத் ஒரு பாடலையும் பாடியுள்ளார். சிலைக் கடத்தலைக் அடிநாதமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. சரத்குமார் காவல் அதிகாரி ரோலில் நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கருமேகங்கள் கலைகின்றன :
2006 ஆம் ஆண்டு இயக்குனர் எழுதிய சிறு கதையை மையப்படுத்தி முன்னணி இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு, கெளதம் வாசுதேவ் மேனன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், அதிதி பாலன் பலரின் கூட்டுப் பங்களிப்பில் உருவாகி உள்ளது “கருமேகங்கள் கலைகின்றன”. வைரமுத்து பாடல்களை எழுத, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு தங்கர் பச்சன் படம் திரை அரங்கில் வந்துள்ளதால், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களே கிடைத்துள்ளன.

ரங்கோலி :
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்களான ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா இந்த படத்தின் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம், விசாரணை, போன்ற படங்களின் மூலம் அழுத்தமான ரோல்களில் நடித்து பிரபலமான முருகதாஸ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். ரங்கோலி படத்தின் டிரெய்லர் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

கிக் :
கானா பஜானா, லவ்குரு, போன்ற கன்னட படங்களை இயக்கி பிரபலமடைந்த பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானம், கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன், செந்தில், ப்ரம்மானந்தா, தம்பி ராமையா, மன்சூர் அலிகான் என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் சந்தானம் நடிப்பில் வெளியான “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் வசூலை வாரிக் குவித்ததால், கிக் படமும் அதே வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

லக்கி மேன்:
யோகி பாபு முன்னணி ரோலில் நடிக்க, இவரோடு சேர்ந்து ரைச்சல் ரபெக்கா, ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லக் ஒரு மனிதனை எங்கு கொண்டு நிறுத்தும் என்பதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள “லக்கி மேன்” டிரெய்லர் பரவலான வரவேற்பை பெற்ற நிலையில், திரை அரங்குகளில் வெளியாகிநல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

Share this post with your friends