Mnadu News

திறமையும் , தொழில்நுட்பமும் இந்திய வளர்ச்சி பயணத்தின் தூண்கள்: பிரதமர் மோடி உரை.

ஐக்கிய நாடுகளின் இரண்டாவது உலக புவிசார் தகவல் கூட்டம் ஐதராபாத்தில் துவங்கியது. காணொளி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி , திறமையும், தொழில்நுட்பமும், இந்திய வளர்ச்சி பயணத்திற்கான இரண்டு தூண்கள என்றும், இவைகள் தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றார். வங்கி சேவை இல்லாத 45 கோடி மக்களுக்கு வங்கி சேவை வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். காப்பீடு இல்லாத 13 கோடியே 50 லட்சம் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகை அளவாகும் என்றார். சிறந்த கண்டுபிடிப்பு திறனுடன் இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. தொழில் துவங்குவதில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தொழில் துவங்குபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது திறமையான இந்திய இளைஞர்களால் சாத்தியமானது. ஏன்று உரையாற்றினார்.

Share this post with your friends