Mnadu News

“தில்லுக்கு துட்டு” பார்ட் 3 ரீலீஸ் தேதி அறிவிப்பு! 

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக வலம் வருபவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த படங்களான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இருந்தாலும் இவரின் ஹீரோ பயணம் சற்று கடினமாக தான் இருந்து வருகிறது. 

இந்நிலையில் சமீப காலங்களில் வெளியான டிக்கிலோனா, ஏஜென்ட் கண்ணாயிரம், குலு குலு போன்ற படங்கள் எதுவும் அவருக்கு சரிவர ஓடவில்லை. இதையடுத்து தன்னுடைய கேரியரில் முக்கியமான வெற்றி படமாக அமைந்த “தில்லுக்கு துட்டு” படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க சந்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 ஹாரர் காமெடி ஜோனரில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்தின் டைட்டில் வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சந்தனம் படங்கள் எதுவும் அண்மை காலங்களில் சரிவர ஓடாத நிலையில், இந்த படத்தை அவர் பெரிதும் நம்பி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

Link : https://youtu.be/7MnPeSmDoiE

Share this post with your friends