சுதிப்தோ சென் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதோடு, இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியது. ஆனால் தற்போது,கேரள உயர்நீதிமன்றத்தில் கோடை விடுமுறை என்பதால் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து,இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, படம் ஏற்கத்தக்கதா என்பதை பார்வையாளர்கள் முடிவு செய்யட்டும்’ என்று கூறி பட வெளியீட்டிற்குத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்ததோடு, இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தை நாட மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

அசாமில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்.
அசாமில் மிதமான நிலநடுக்கமானது உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி ஏழு...
Read More