சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற மே 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ஆதா ஷர்மா, புர்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சியில், ‘ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன்; தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளன். இது கேரளத்தைச் சேர்ந்த 32 ஆயிரம் பெண்களின் கதை’ எனக் கூறும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இந்தப் படம் வெளியானால் கேரளத்தை போல இங்கும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More