Mnadu News

தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று வெளியிட்டுள்ளது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:-

வட சென்னை – கலாநிதி வீராசாமி, தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை – தயாநிதிமாறன், ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) – செல்வம், அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் – கதிர் ஆனந்த், தர்மபுரி – அ.மணி, திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை, ஆரணி – தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி – மலையரசன், சேலம் – செல்வ கணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி (தனி) – ஆ.ராசா, கோவை – கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி, பெரம்பலூர் – அருண்நேரு
தஞ்சாவூர் – முரசொலி, தேனி – தங்க தமிழ்செல்வன், தூத்துக்குடி – கனிமொழி, தென்காசி (தனி) – ராணி ஸ்ரீகுமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends