Mnadu News

தீபாவளியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிக்கை!

அனைத்து தரப்பட்ட மக்களாலும் கொண்டப்படும் பண்டிகை “தீபாவளி”. இந்த பண்டிகையின் போது அனைத்து வயதினரும் பேதம் பாராமல் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் உண்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று பெருமளவில் மாசுபடுகின்றது. அதே போன்று அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியவர்கள் மற்றும் நோயாளிகள், உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

எனவே, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மேலும் பல்வேறு வகையான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவமனைகள், குடிசை பகுதிகள் என இது போன்று இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாக வகையில் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Share this post with your friends