தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா மாநகரப் பேருந்துகளில் கடந்த செப்டம்பர் வரை 173 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More