தீபாவளி பண்டிகை வருகிற 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல தயாராக உள்ளனர். சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்து 888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் 4 ஆயிரத்து 218 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்றும் வரம் 21,22,23 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More