பண்டிகைகள் வரும்போதெல்லாம் பலதரப்பட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவலோடு இருப்பார்கள். தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி என்பதால், நாளை முதலே பேருந்துகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், பேருந்துகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்வோர் பேருந்தின் கட்டணம் பன்மடங்காக உயர்ந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளனர். அது ₹3000 முதல் ₹4000 வரை வசூலிக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.