துணிவு திரைப்படம் ஹெச் வினோத் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், இப்படம் பொங்கலுக்கு வாரிசு படத்துடன் வருவது உறுதி ஆகி உள்ளது.
பஞ்சாப்பில் நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைபற்றி உள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் இந்த பாடலை பாடி உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ஆலுமா டோலுமா போன்று ஒரு மாஸ் குத்து பாடலாக இது உருவாகி உள்ளது.