ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் “துணிவு”. பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்ஸ்க்காக எதிர்நோக்கி காத்து உள்ளனர்.
அப்படி ஒரு தெறிக்கவிடும் தகவல் கசிந்துள்ளது, இப்படத்தின் முதல் சிங்கிள் பற்றி. “சில்லா சில்லா” என்ற அந்த புரோமோ பாடல் வரும் 17 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிப்ரான் இசையில், அனிருத் குரலில், வைசக் வரிகளில் துணிவு படத்தின் புரொமோஷன் பாடல் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தல ரசிகர்கள் சில்லா சில்லா வைப் இல் உள்ளனர்.