Mnadu News

துணைவேந்தர் மறுநியமனம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி மம்தா அரசால் மீண்டும் நியமிக்கப்பட்டார் இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜியின் மறு நியமனம் தவறு என்று உத்தரவிட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மம்தா அரசு;; தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் ,கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜியின் மறு நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி; செய்து, மேற்கு வங்க ஆளுநரின் ஒப்புதலின்றி மாநில அரசு அத்தகைய முடிவை எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மம்தா பானர்ஜிக்கு மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Share this post with your friends