Mnadu News

துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர்.

சட்டபேரவையில் நிதித்துறை அமைச்சர் பழினிவேல் தியாகராஜன், 2022-23 ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர் , 2022-23 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தில் வைக்க விளைகிறேன். துணை மானிய கோரிக்கைகைள விளக்கி கூறும், விரிவான ஒரு அறிக்கை மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இத்துணை மதிப்பீடுகள் மொத்தம் .3 ஆயிரத்து 795 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்குவதற்கு வழி செய்கின்றன.

இது புதுப்பணிகள் மற்றும் புது துணை பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இடங்களுக்கு சட்டப் பேரவையில் ஒப்புதல் பெறுவதற்கும், எதிர்பாராத செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வது இத்துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும். போக்குவரத்து துறையில் சொத்துகளை உருவாக்குவதற்கு மாநில போக்குவரத்து கழகங்களுக்கு பங்கு மூலதன நிதியாக 500 கோடி ரூபாய் நிதியை அரசு அனுமதிக்க உள்ளது.
நகர்புற பகுதிகளில் சாலையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்துக்கு மானியத்தின் முதல் தவணையாக.550 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
சென்னை பெருநகர் மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஆகியவற்றிற்கு மாநில பேரிடர் தடுப்பு பிரிவின் கீழ் 373 கோடியே 50 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக 134 கோடியே 22 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 7 பாசன கட்டமைப்புகளை சீரமைக்க 104 கோடியே 13 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
சென்னை வெளிவட்ட சாலை திட்ட பகுதி 1 திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவதற்கு கூடுதலாக 227 கோடியே 16 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
2022-23 ஆம் கல்வியாண்டில் 28 சிறப்பு பள்ளிகளை நிறுவுவதற்கு 169 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு இந்த அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவை தொகை வழங்குவதற்காக கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை முன்பணமாக 252 கோடியே 29 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகில் உள்ள குந்தம்பாக்கம் கிராமத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் இருந்து 168 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான ரூ.33 கோடியே 56 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.
உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 11 புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு 97 கோடியே 5 லட்சம் ரூபாயை அரசு அனுமதித்துள்ளது எ;னறு பேசினார். இதையடுத்து ,சட்டபேரவையில் மாற்று தலைவர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் அப்பாவு படித்தார். அதன்படி க.அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், துரை சந்திரசேகர், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் மாற்று தலைவர்களாக செயல்படுவார்கள். சட்டபேரவையில் பேரவைத் தலைவர்;, துணை பேரவைத் தலைவர்; இல்லாத நேரத்தில் மாற்று தலைவர்களில் ஒருவர் சட்டப் பேரவையை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends