Mnadu News

துபையில் இந்து கோயில் திறப்பு: அலைமோதும் மக்கள் கூட்டம்.

துபையில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தாபார் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே புதிய இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை, அதிகாரபூர்வமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்துவைத்தார். இந்தக் கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலின் பிரதான கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் மேற்பகுதி மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப் பூ வரையப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கோயிலில் 14 பண்டிதர்கள் மூலமாக வேத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்டு வருகின்றன. இவர்கள் 14 பேரும் பிரத்யேகமாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, தினசரி வழிபாடு நடத்தப்படுகிறது. இவர்கள் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயிலில் பூஜை செய்கின்றனர்.

Share this post with your friends