Mnadu News

‘தும்பா’ படத்தில் இணைந்த ‘கலக்கப்போவது யாரு’ பிரபலம்

இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கத்தில், நடிகர் தர்ஷன் நடித்து வரும் படம் ‘தும்பா’. இந்த படத்தில் நாயகியாக அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி பிரபலம் தீனா இணைந்துள்ளார்.

 

தீனா இதற்கு முன் நடித்த பா.பாண்டி போன்ற படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரத்திலேயே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்து தீனா கூறும்போது “எல்லா நண்பன் வேடம் போல் இல்லாமல் இதில் படம் முழுவதும் வருவேன். நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருக்கிறது.  ஒரு இடத்தில் இல்லாத குரங்கை இருப்பதாக உணர்ந்து நடிக்க வேண்டும். மேலும் இந்த எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்று தீனா கூறியுள்ளார்.

Share this post with your friends