Mnadu News

துருவ நட்சத்திரம் செகண்ட் சிங்கிள் ரீலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

நடிகர் விக்ரம் :

சரியான இயக்குனர்களை தேர்வு செய்து வெவ்வேறு கதைகளை கையில் எடுத்து அதில் தமது முழு உழைப்பையும் கொட்டி நடிப்பவர் விக்ரம். என்ன தான் கோப்ரா படம் தோல்வியை தழுவி இருந்தாலும், இவரின் அபார உழைப்பு மற்றும் மெனக் கெடல் பேசப்பட்டது.

பொன்னியின் செல்வன் வெற்றியும் தங்கலான் படமும் :

மணி ரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். இந்த படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து உள்ளது. இதை தொடர்ந்து பா. ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்து வேறு ஒரு களத்தில் பயணித்து வருகிறார். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பேசும் படமாக தங்கலான் உருவாகி வருகிறது.

துருவ நட்சத்திரம் செகண்ட் சிங்கிள் அறிவிப்பு:

2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் தற்போது வரை இழுத்து கொண்டே செல்கிறது. ஆம், எப்போதோ வெளியாக இருக்க வேண்டிய படம் இன்னும் கிடப்பில் உள்ளது. ஏற்கனவே, படத்தின் முதல் பாடலான “ஒரு மனம்” வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலின் புரோமோ வெளியாகி உள்ளது. His Name is John என்கிற அந்த ராப் பாடல்சின் புரோமோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த பாடல் வரும் 19 அன்று வெளியாக உள்ளது.

Share this post with your friends