Mnadu News

துளசியும் எண்ணற்ற மருத்துவ குணங்களும்

நம்மோடு நமக்காக நம்மைச் சுற்றியே இருக்கும் அற்புதத் தாவரங்கள் இயற்கையன்னையின் வழங்கியிருக்கும் மிகப்பெரிய கொடை.

எந்த நோய் ஏற்பட்டாலும் சாதரண மருத்துவக் குணம் கொண்டத்  தாவரங்களைக் கொண்டு  மருத்துவம்  பார்க்க முடியும். நோயின் வீரியத்தைப் பொறுத்து வீரிய மருந்துகளை படிப்படியாக நாட வேண்டும் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

உடல்பிணி தீர மட்டுமில்லாமல், அழகு கிடைக்க, இளமை நீடிக்க என நாம் உண்ணும் உணவிலேயே மருத்துவக் குணாதியசங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்பற்றி குணமாகவில்லையென்றாலும் சவமாவதைத் தள்ளி போடலாம்.

துளசி:

துளசியின் மருத்துவப் பயன் சொல்லி மாளாது. அதனால் துளசித் தண்ணீர் குடிங்கன்னு சாதரணமா சொன்னா யாராச்சும் கேப்பாங்களோ மாட்டாங்களோன்னுதான் ஸ்ரீ விஷ்ணுவுக்குப் பிரியம் என்று சொல்லி தெய்வீக மூலிகையாக்கி நன்மை கொண்டாடிவிட்டனர்.

துளசியில்  கருந்துளசி, செந்துளசி, நற்றுளசி நாய்துளசி, முள் துளசி, நிலத்துளசி எனப்  பலவகைகள் உண்டு. ஆனால் கருந்துளசியே அதிக மருத்துவப் பயனுடையது.

இலை, கிளை, தண்டு, ஆகியவை கரும்பச்சை நிறத்திலும், கதிர்கள் சிவப்பு நீல நிறத்திலும் இருக்கும். காரமும் மணமும் அதிகமாக இருக்கும் என்பதே கருந்துளசிக்கான அடையாளங்கள்.

நோயற்ற வாழ்வு வாழ:

சுத்தமான செம்புப் பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு ஐந்தாறு மணிநேரம் ஊறவைத்த பின் அந்த நீரை தினமும் பருகி வந்தால் எந்த நோயும் அவ்வளவு எளிதாக நம்மை அண்டாது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் என்ற பெயரில் வழங்குவதும் இதை வைத்து தான்.

 சளித் தொல்லை நீங்க:

சளித்தொல்லையால் ரொம்ப கஷ்டபடுறீங்களா? இஞ்சியும் துளசி இலையும் கையில் இருக்கிறதா அப்போ கவலையை விடுங்க… ஐந்தாறு துளசி இலைகளுடன், சிறிது இஞ்சி சேர்த்து நன்றாய் மென்று விழுங்குங்கள். நிச்சயம் காரமாகத் தான் இருக்கும். அதற்கும் தீர்வு இருக்கிறது ஆறவைத்த சுடுதண்ணீர் குடியுங்கள் காரம் தானக இறங்கிவிடும். அப்புறம் பாருங்கள் சளித்தொந்தராவது பை பாய் சொல்லுங்கள்.

கக்குவான் இருமலைக் குணப்படுத்த:

சிறு குழந்தைகளைப் படுத்தி எடுக்கும் கக்குவான் இருமலுக்கு துளசிப்பூ வைத்தியம் நம்பகமானது. துளசிப்பூவுடன் வசம்பு திப்பிலி, இரண்டையும் சம அளவு வெயிலில் உலர்த்தி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் துளசிப் பொடியை தேவையான அளவு தேனில் கலந்து தந்தால், சளி எளிதில் விரைவில் குணமாகும். இருமல் படிபடியாக கட்டுப்படும்.

வயிற்றில் பூச்சியா ? மாத்திரையை கைவிடுங்கள்:

வயிற்றில் பூச்சிகள் இருந்தால் வயிறு சார்ந்த கோளாறுகளை உண்டுபண்ணுவதுடன் மந்த நிலைக்கும் ஆளாக்கும். ஒரு பிடி துளசி எடுத்து விரட்டுங்கள் பூச்சிகளை ! இரண்டு தம்ளர் தண்ணீரில் துளசியுடன் அரை ட்யூஸ்பூன் மிளகுப்பொடி போட்டு அரைத் தம்ளருக்கு வற்றக் காய்ச்சி அந்நீரைப் பருகி வந்தால் கிருமித் தொல்லை நீங்கும். வயிறு உபாதையும் நீங்கும்.

தலைவலி நீங்க:

தலைவலி என்பது சாதரணமாக எல்லாரோரும் எதிர்கொள்ளக் கூடிய ஒரு பிரச்சினை. துளசியுடன், ஒரு துண்டு சுக்கு, இரண்டு இலவங்கம் வைத்து நன்றாக அரைத்து நெற்றியில் பற்று போட்டால் உடனே தலைவலி தணியும். தாய்ப்பால் கிடைத்தால் அதில் இதைக் கலந்து பற்று போட்டால் இன்னும் அதீத பலன் கிடைக்கும்.

பூச்சிக்கடியா?

துளசி, ஓம இலை இரண்டையும் கலந்து ரஸம் போல தயாரித்து அருந்தி வந்தால் மெழுகுபோல மேனியில் பளபளப்பு ஏறும்.

பொடுகு தொல்லை நீங்க:

பொடுகு இருப்பவர்கள் ஒரு வித தாழ்வுமனப்பான்மையால் பொது இடங்களுக்கு தங்களை முன்னிறுத்துவதை விரும்பமாட்டார்கள். அப்படி இருப்பவர்களுக்காக இந்த டிப்ஸ் இரண்டு வசம்பைச் சுட்டு, பொடியாக அரைத்துக் கொள்ளவும். கருந்துளசியை விழுதாக அரைத்துக் கொள்ளவும் இரண்டு அரைவைகளையும் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கொதிக்க வைத்து இரண்டு நாள் சென்றபின் வடிகட்டி தலைக்குத் தேய்த்து குளிக்க ஈறு பேன் தொல்லை அறவே இருக்காது.

மூலிகை ராணியான துளசி நமது வீட்டிலேயே வளர்க்க முடியும். பண்டைய காலந்தொட்டு இன்றும் சில இடங்களில் துளசி மாடங்கள் இருக்கின்றன. கடவுள்  நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ மூலிகை ராணியான துளசியை முடிந்தவரை வீட்டில் வளர்ப்போம். மருந்து மாத்திரைகளைத் தவிர்ப்போம்.

Share this post with your friends