தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த வீமன் என்பவர் வீட்டில் ஒருவர் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் திருட முயற்சித்துள்ளார். அப்பொழுது அங்கு உறங்கி கொண்டிருந்த முதியவர் கூச்சலிட்டவுடன் அக்கம் பக்கத்தினர் அந்த திருடனை மடக்கி பிடித்து அங்கிருந்த தூண் ஒன்றில் கட்டி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருட முயன்றவர் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா பொட்டலம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.