தூத்துக்குடி, அழகேசபுரத்தை சேர்ந்த சூரிய நாரயணன் என்பவர் வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக சென்னை வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி வனச்சரகம், வனஉயிரின குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் திருநெல்வேலி வனகாவல் அலுவலர்கள் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சிறுத்தை தோல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் சூரிய நாரயணனனை கைது செய்து விசாரணை செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More