தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரம், பாகம்பிரியாள் அம்பாள், உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.