தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர் என்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர் என அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனவும், கலவரம் நடந்து கொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் ஊரில் இல்லை எனவும் அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது காட்டில் வேட்டையாடுவதுபோல் காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டிருக்கிறார் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்துகொண்டதால் அப்படி சுட வேண்டும் என்ற எண்ணம் சுடலைக்கண்ணுவுக்கு ஏற்பட்டிருக்கலாம். புத்திசுவாதீனம் இல்லாதவர் போல் இப்படி நடந்துகொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல என்று அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் 17 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More