Mnadu News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்திருந்தது. இது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டது.
,இந்நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக அன்றைய அதிமுக அரசுதான் ஆணையம் அமைத்து விசாரணை செய்யப்படும் என அறிவித்தது. அன்றைக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தவறான கருத்து என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது
கொடூரமான கொலை தாக்குதல்களை அறையில் வந்து வர்ணனைகளாகக் கேட்டுவிட்டு வெளியில் வந்து தனக்கு எதுவும் தெரியாது என எடப்பாடி பழனிசாமி பொய் கூறியுள்ளார். இதற்கான தண்டனையை தேர்தல் மூலமாக தமிழக மக்கள் அதிமுகவிற்கு வழங்கினர். நீதியரசர் அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபடாத 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. அதே சமயம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ அவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று தமிழ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறி உள்ளார்.

Share this post with your friends