தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் இந்த வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதோடு, அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More