தென்கொரியாவில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது டேஜியோன் என்னும் நகரம். சியோலில் பகுதியின் ஒரு நகரம் இதுவாகும்.

இந்நிலையில், நேற்று காலை இந்த வணிக வளாகத்தின் அடித்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ வேகமாக அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவ தொடங்கியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக இறங்கினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகத்துக்கு அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்து 200-க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கோர விபத்தில் வணிக வளாகத்தின் அடித்தளத்தில் கார் நிறுத்தும் இடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் ஏழு பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் தீ விபத்து நேரிட்ட சமயத்தில் வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.