Mnadu News

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வந்தன.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, தென்னாப்பிரிக்காவில் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் அதாவது 5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள ஏற்கெனவே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி, தனது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி இந்த 8 சிவிங்கிப் புலிகளையும் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். இப்போது 8 சிவிங்கிப் புலிகளும் நல்ல உடல்நிலையுடன் காணப்படுகின்றன.அடுத்தகட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகளும் 5 பெண் சிவிங்கிப் புலிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் சி-17 விமானம் அந்நாட்டின் கௌடெங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளுடன்; மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப் படை தளத்துக்கு வந்தடைந்தது. அங்கிருந்து, விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படும் சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படுகின்றன.

Share this post with your friends