Mnadu News

தென் கொரியாவில் கனமழை வெள்ளம்! பலி எண்ணிக்கை உயர்வு!

தென் கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருவதால், அங்குள்ள நோன்சான், யோங்ஜூ உள்ளிட்ட 13 நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால், சூங்சாங் மாகாணத்தில் பல அணைகள் நிரம்பி வழிவதால், அங்குள்ள கோசன் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக, செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் பல வீடுகள், கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக ஆகியுள்ளன. மேலும், பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தென் கிழக்கு மாகாணமான கியோங்சாங்கில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே வடக்கு சூங்சாங் மாகாணத்தில் தண்டவாளத்தை மண் மூடியதால் ஒரு ரெயில் தடம் புரண்ட காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரெயில் சேவைகளும் அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதேபோல் வெள்ளப்பெருக்கு காரணமாக 200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், மோசமான வானிலை காரணமாக 12 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

இதனால் அங்குள்ள ராணுவ வீரர்களுடன் அந்த நாட்டின் பிரதமர் ஹன் டக் சூ ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து 7,500 க்கும் மேற்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உள்ளனர். மேலும், மீட்புப் பணிகள் அங்கு வேகம் எடுக்க துவங்கி உள்ளன. 

Share this post with your friends