கரூரில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ராமன கோவில் புரட்டாசி பெருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் மலையோடு மலையாக தானாக தோன்றிய தான் தோன்றி அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமிகள் ஆலயம் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில். சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி பெரும் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த மாதம் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் புரட்டாசி பெருந்திருவிழா தொடங்கியது. கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன்.வடமழுத்து திருத்தேரை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் நடைபெற்றது. இது தவிர விசேஷ நாட்களில் கருடவாகனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், ஆகியவற்றில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது. புரட்டாசி பெருநாளில் திருவிழாவின் முக்கிய அம்சமான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி வரும் பொழுது பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என்று பக்தி முழக்கமிட்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தினார்கள், பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.’பொதுமக்கள் சிரமம் இல்லாமல் செல்லும் அளவிற்கு பேருந்து வசதி .போக்குவரத்துத் துறையினர்.ஏற்பாடு செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டனர்..