கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது “சலார்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனமே “சலார்” படத்தையும் பிரம்மாண்ட முறையில் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் “சலார்” படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ₹ 10,000 அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்பட்டது.
தற்பொழுது”சலார்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் நிலையில், இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் “சலார்” படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. ஆம், டீசர் வெளியாகி 8 மணி நேரத்திற்க்குள் யூடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், கே.ஜி.எப் போலவே இந்த டீசரும் உள்ளதாக இணைய வாசிகள் கூறி வந்தாலும், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த படமாவது நடிகர் பிரபாஸ் அவர்களுக்கு கை கொடுக்குமா என அவரது ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.