Mnadu News

தெறிக்கும் ஜெயிலர் ஷோகேஸ்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

2021 ஆம் ஆண்டு வெளியான “அண்ணாத்த” படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி கதை தேர்வில் மிகுந்த கவனம் காட்ட துவங்கினார். ஆம், அவருக்கு பல இளம் இயக்குநர்கள் கதை கூறி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடிபடாமல் இருந்துள்ளன. அப்போது, ரஜினி தற்செயலாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகவே, அவர்களின் இயக்குனர் நெலசனை பரிந்துரை செய்துள்ளனர். இந்த நிலையில் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூற அது ரஜினிக்கு பிடித்து போகவே, உடனே இவரை புக் செய்து விட்டார். ஆனால், பீஸ்ட் படத்தின் ரிலீஸுக்கு முன்னரே நெல்சன் தான் ரஜினி பட இயக்குனர் என்பது உறுதி ஆகி விட்டது.

பீஸ்ட் படம் விஜய் நடிப்பில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. இதை அறிந்த ரஜினி சன் பிக்சர்ஸ் நிர்வாகத்தை அழைத்து, படம் எப்படி போகிறது என கேட்டுள்ளார், அதற்கு படம் நன்றாக ஓடுகிறது, மேலும் கலெக்ஷன் நன்றாகவே உள்ளது என கூறவே, இயக்குனரை மற்றும் முடிவை கி விட்டுள்ளார் ரஜினி.

நெலசனை அழைத்து கவலை பட வேண்டாம் இந்த படத்தை வெற்றி படமாக மாற்றுவோம் என கூறி கடின உழைப்பை மட்டும் போடுங்கள் என கூறி உற்சாகமூட்டி உள்ளார் ரஜினி. அப்படி தான் உருவாகியது “ஜெயிலர்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் படம் எப்படி உருவாக போகிறது என்கிற ஆவல் ரசிகர்களை பற்றி கொண்டது.

அதன்பின்னர் படத்தின் ஒவ்வொரு நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் வரவே ரசிகர்கள் இன்னும் குஷி ஆகினர். ஆம், மோகன்லால், விநாயகன், சிவராஜ்குமார், தமன்னா, வசந்த ரவி, சுனில், என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து உள்ளனர். காவாலா துவங்கி ஜுஜுபி பாடல் வரை வெளியான அனைத்துமே வைரல் ஹிட் அடித்து படத்துக்கு இன்னும் பலம் சேர்த்துள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று ஷோகேஸ் வெளியாகும் என அறிவித்தது. படத்தின் சிறந்த பகுதிகளை அள்ளி முடித்து ஒரு நச் ஷோகேஸ் வெளியிட்டு உள்ளது படக்குழு. இதில் ரஜினி ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ரோலில் நடித்து உள்ளார், மேலும் இதில் நெல்சன் பாணியிலான ஸ்கிரீன் பிளே இருப்பதை இந்த 2 நிமிட காணொளி தெளிவாக உணர்த்துகிறது. மொத்தமாக “ஜெயிலர்” ரசிகர்களை ஏமாற்றது என தோன்றுகிறது.

Share this post with your friends