Mnadu News

தெற்கு மெக்சிகோவில் அரங்கேறிய வினோத திருமணம்! 

சடங்குகள்: 

உலகமெங்கும் எத்தனையோ விதமான கலாச்சார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆம், ஒவ்வொரு நாடும், தனித்துவ நடைமுறைகளை கொண்டவர்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது. 

வினோத சடங்கு: 

தெற்கு மெக்சிகோவில் உள்ள நகரம் சான் பெட்ரோ ஹுவாமெலுலா. விக்டர் ஹியூகோ சொசா இந்த நகரத்தின் மேயர் ஆவார். இவர், ஆலிசியா ஆட்ரியானா என்ற பெண் முதலை ஒன்றை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு உள்ளார். இது தான் தற்போது வைரல் ஆகி உள்ளது. பல நூறு ஆண்டு கால பழமையான நடைமுறையாகும் இது என கூறப்படும் நிலையில், இப்படி செய்வதன் மூலமாக நாட்டின் நன்மை வேண்டி இது நடத்தப்படுகிறது. 

முதலையுடன் திருமணம்: 

மேலும், இத்திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, முதலைக்கு இளவரசி போன்று ஆடைகள் அணிவிக்கப்படும். திருமணம் செய்த பின்னர், மணமகளான முதலையை கையில் வைத்து கொண்டு மேயர் சொசா, உற்சாக நடனமாடினார். கலாசார இணைவை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அதன் மூக்கு பகுதியில் மேயர் சொசா முத்தமிட்ட காட்சி வைரல் ஆகி உள்ளது. 

ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு கலாச்சாரம் என்பது போல, நமது ஊரில் மழை வேண்டி யாகம், படையல் போன்ற பல சடங்குகள் இருக்கும் நிலையில், தெற்கு மெக்சிகோவில் சுபிக்ஷம் வேண்டி இப்படி ஒரு வினோத நிகழ்வு அரங்கேறி உள்ளது. 

Share this post with your friends